Thursday, November 29, 2007

ஹை கூ.....!!

ஒருமாத உழைப்பு
குடிக்கவா?சூதாடவா?
சம்பள நாள் சங்கடம்!

வானத்திலும் தகறாறு
நேரில் சந்திப்பதில்லை
சூரியன் சந்திரன்!

ஆட்சி மாற்றம்
கட்சி மாறும்
காவல்துறை!

இவர்போல் உழைப்பவர் யார்?
இந்தியருக்குப் புகழ்மாலை!
வெளிநாட்டில்!

சாமிவந்து ஆடுகின்றனர்
திரையரங்குகளில்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு!

படித்த மேதைதான்
கைநாட்டு அவசியம்
பத்திரப் பதிவகம்!

கடலைத் திருத்தும் முயற்சி
ஆறுகளை விழுங்கியது
முகத்துவாரம்!

புத்தர் பிறந்த நாடு
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
போதிமரம்!

பெண் சிசுவதை
ஆண்களின் பெருக்கம்
எய்ட்ஸ் எச்சரிக்கை!

மனிதரின் புறக்கணிப்பு
அநாதைப் பிணம்
சுற்றமாய் எறும்புகள்!

-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்.

நவம்பர் 29 2007.

No comments: