Monday, November 26, 2007

வாழிய செந்தமிழ்!!

சாதிகள் ஆயிரம்!
பேதங்கள் ஆயிரம்!
வழக்கங்கள் ஆயிரமுண்டு!
ஆயினும் தாய்மொழி
யாதெனக் கேட்பின்
'தமிழ்' ஒன்றே சொல்வர்!

கட்சிகள் எண்ணிலா!
காட்சிகள் எண்ணிலா!
பாகுபாடுகள் எண்ணிலாவுண்டு!
ஆயினும் உன்னினம்
என்னெனக் கேட்பின்
'தமிழன்' என்றே சொல்வர்!

இந்தியாவே தாயகம்!
இலங்கையே தாயகம்!
மலேசியாவே தாயகமென்பர்!
ஆயினும் உரைப்பது
எம்மொழி கேட்பின்
'தமிழ்' என்றே சொல்வர்!

கடல் கடந்து
மலை கடந்து
புலம் பெயர்ந்து போயினும்
குலம் மறந்து
மனம் இணைக்கும்
வாழிய எம் செந்தமிழ்!!

-இமாம். கவுஸ் மொய்தீன்.

முத்துக்கமலம்.

15-3-2007.

No comments: