Sunday, November 25, 2007

ஆடும் கசாப்புக்காரனும்!!

ஆடும் கசாப்புக்காரனும்!!
--------------------------------
ஆடு!

கசாப்புக்காரனையே

நம்பிச் செல்லும்

என்பது பொது மொழி!

கழுத்துக் கயிறை இழுத்தும்

வாகனங்களில் கட்டியும்

கசாப்புக்காரனால்

பலவந்தமாய்

ஆடுகள்

கொண்டுச் செல்லப்படுவதைப்

பார்க்கையில்

கேள்விக்கும்

கேலிக்கும்

உரியதாகிவிடுகிறது

இப்பொது மொழி!


பேச்சில் தெரியும்

கறியின் விலையேற்றம்

ஈக்களைக் காட்டிலும்

மிகையாய் மொய்க்கும்

நுகர்வோரைக் காண்கையில்

பொய்த்துத் தான் போகும்!

தொங்கிக் கொண்டிருக்கும்

ஆட்டைத் துண்டு போட்டு

தசை சவ்வு எலும்புகளாய்ப்

பிரிக்கும் கை வண்ணம்

ஆகா............................!

கசாப்புக்காரனின் கையிலும்

என்னே

கலை நயம்!


மீன் சந்தையில்

நாள்தோறும்

மாறும் விலை!

பேரம் பேசினாலோ

மீனைக்காட்டிலும்

மிகையாய் நாறிவிடும்

மீன்காரரின்

பேச்சின் நிலை!


கசாப்புக் கடையிலோ

கறார் விலை!

எடையில்

கறியில்

புலப்படும் குறைகள்

அவரின்

மதிப்பில் மரியாதையில்

மறைந்துவிடும்!


எது

எப்படி இருப்பினும்

மூளை இருக்கிறதா?

கேட்டால்

புன்சிரிப்புடன்

பதில் கூறும் பாங்கு

கசாப்புக்காரரிடம் மட்டுமே!

திண்ணையில் இமாம்.கவுஸ் மொய்தீன்

Thursday September 20, 2007

drimamgm@hotmail.com

No comments: