முகமன்
கூறுகிறார்கள்!
கை
குலுக்கிக் கொள்கிறார்கள்!
எப்போது?
காலை வாரலாம்!
என்கிற சிந்தனையோடு.
ஒருவரை
வானளாவப்
புகழ்கிறார்கள்!
இன்னொருவரை
சாக்கடைப் புழுவாய்த்
தூற்றுகிறார்கள்!
காட்சி மாறுகிறது!
கட்சி மாறுகிறது!
புகழ்ந்தவரை
இகழ்கிறார்கள்!
வசைபாடியவரை
வாழ்த்துகிறார்கள்!
அரசியலில்
நிலையான
நண்பருமில்லை!
பகைவருமில்லை யென
தம் நிலையற்ற
தன்மைக்குச் சமாதானமும்
கூறுகின்றனர்....
மாக்களாய் இருக்கும்
மக்களிடம்!
நாவும் நிலையும்
தடம் புரள்கின்றன!
பச்சோந்தியைக்
காட்டிலும்
வேகமாய்
நிறம் மாறும்
அரசியல் வாதிகள்!!
சரி!
எப்போது நாம்
திருந்தப் போகிறோம்?
-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.
தமிழோவியம்.
JUL 12, 2007
Tuesday, November 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment