சூரியனின் சுடுநெருப்பில்
எத்தனை முறை
வதங்கியிருப்பாள்!
இடி மின்னல் கொட்டும் மழையில்
எத்தனை முறை
நனைந்திருப்பாள்!
பெருக்கெடுத்தோடும் வெள்ளங்களில்
எத்தனை முறை
வாடியிருப்பாள்!
புயல்கள் சூறாவளிகள் சுழற்காற்றுகள்
எத்தனை முறை
சந்தித்திருப்பாள்!
பூகம்பங்கள் சுனாமிகள் பிரளயங்கள்
எத்தனை முறை
தாங்கியிருப்பாள்!
பீரிட்டுவரும் எரிமலைகளின்
எத்தனை வடுக்களை
சுமந்திருப்பாள்!
வறட்சிகள் பஞ்சங்கள் இயற்கை சீற்றங்கள்
எத்தனை கண்டு
கண்ணீர் வடித்திருப்பாள்!
சோதனைகளைத் தாங்கிப் பழகிவிட்ட
நம் அன்னையரைப் போல்
பூமித் தாய்!!
- இமாம்.கவுஸ் மொய்தீன் (drimamgm2001@yahoo.co.in)
கீற்று.
29-6-2007.
Tuesday, November 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தாய்மையின் பெருமை பேசும் நல்ல கவிதை.உங்கள் பணி தொடரட்டும்.
வாழ்த்துக்கள்!
Post a Comment