Sunday, January 13, 2008

பொங்கட்டும் பொங்கல்!!

பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் பொங்கல்!

தமிழர் இல்லந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் மகிழ்ச்சி!

தமிழர் உள்ளந்தோறும்.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் தமிழுணர்வு!

தமிழர் இதயந்தோறும்.


பொங்குக பொங்கல்!

முழங்கட்டும் தமிழே!

தமிழர் நா யாவும்.


பொங்குக பொங்கல்!

தழைக்கட்டும் முயற்சி!

தமிழர் ஏற்றம் பெறவே.


பொங்குக பொங்கல்!

வேண்டுக இறைவனை!

தமிழர் ஈழம் பெறவே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் இனஉணர்வு!

செழிக்கட்டும் தமிழர் வாழ்வே.


பொங்குக பொங்கல்!

பொங்கட்டும் விவேகம்!

அழிக தமிழர் பகையே!


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்.

தமிழோவியம்,ஜனவரி 10 2008.

முத்துக்கமலம்,14-1-2008.

1 comment:

Unknown said...

உங்களின் கவிதைகளில் சமுதாய சிந்தனையும்,மனித நேயமும் மிளிர்கின்றன. நல்ல கருத்துச் செரிவு மிக்க கவிதைகள். தொடரவும் நும் பணி.
அன்பழகன்.